சனி, 5 மார்ச், 2011

ஃபிர்அவ்ன்

யூத, கிறிஸ்தவர்களால்' பாரோன்' எனக் குறிப்பிடப்படும்
பிர்அவ்ன் வலிமைமிக்க மன்னனாக திகழ்ந்தவன். தன்னையே கடவுள் 
என வாதிட்டவன் . தனது நாட்டில் சிறுபான்மையினராக இருந்த இஸ்ரவேலர்களை 
 கொடுமை படித்தினான்.

அவர்களில் ஆண்களை மட்டும் கொன்று குவித்தான். இவனுக்கு ஓரிறைக்
கொள்கையை உணர்த்தவும் , அவனது கொடுமைகளைத் தட்டி கேட்கவும் மூஸா 
(மோசே) ஹாருன் (ஆரோன் ) ஆகிய இருவரையும் தூதர்களாக இறைவன் அனுப்பினான் 

ஆயினும் அவன் திருந்தவில்லை. அவனும் அவன் படையினரும் கடலில் மூழ்கடிக்கப் 
பட்டனர் . 

அல்லாஹ் தன திருமறையிலே கூறுகின்றான் ..

இஸ்ராயிலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம் பிர்அவ்னும் அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களை பின்
தொடர்ந்தனர். முடிவில் அவன் முழ்கும் போது "இஸ்ராயிலின் மக்கள் நம்பியவனை
தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன் நான் 
முஸ்லிம் " என்று கூறினான் . (10  : 90)

அதற்க்கு அல்லாஹ் கூறினான்
இப்போது தானா ? ( நம்புவாய் ) இதற்க்கு முன் பாவம் செய்தாய் ;
குழப்பம் செய்பவனாக இருந்தாய்  ( 10  : 91  )

உனக்கு பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை
இன்று பாதுகாப்போம். ( என்று கூறினோம் ) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். ( 10 : 92  )  

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக